TNPSC Thervupettagam

நைட்ரஜன் வாயு செலுத்தி மரணதண்டனை வழங்கல் – லூசியானா, அமெரிக்கா

March 24 , 2025 7 days 53 0
  • லூசியானா மாநில அரசானது முதல் முறையாக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரணத் தண்டனையினை நிறைவேற்றியுள்ளது.
  • 15 ஆண்டுகளில் இது அந்த அரசின் முதல் மரணதண்டனை ஆகும்.
  • இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்காவில் இரண்டாவது முறையாக இத்தகைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • அமெரிக்காவில் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வேண்டி, நைட்ரஜன் வாயு செலுத்துதல் முறையானது நான்கு முறையில் மட்டுமே (அனைத்தும் அலபாமாவில்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • லூசியானா அரசானது, கொடிய உயிர்க்கொல்லி மருந்துகளைப் பெறுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளது.
  • லூசியானாவில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் மரண தண்டனையினை பெற உள்ளனர்.
  • எதிர்கால மரண தண்டனைகளுக்காக என்று அந்த அரசானது, ஒரு சிறப்பு நைட்ரஜன் ஹைபோக்ஸியா வசதியை உருவாக்கியுள்ளது.
  • நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்பது ஒரு கைதிக்கு ஆக்ஸிஜன் வழங்கீடு நிறுத்தப் படுவதால் அவரது மரணத்திற்கு வழி வகுக்கும் வகையில் ஒரு மரண தண்டனையை நிறைவேற்றும் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்