TNPSC Thervupettagam

நைல் திருவிழாவின் 6வது இந்திய பதிப்பு

March 10 , 2018 2451 days 780 0
  • எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 2018-ஆம் ஆண்டிற்கான நைல் திருவிழாவின் 6வது இந்திய பதிப்பு மார்ச் 6 முதல் 17 வரையில்  பல்வேறு கலை மற்றும் கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகின்றது.
  • எகிப்தில் நடைபெறும் மிகப்பெரிய வெளிநாட்டு திருவிழாவான இது, இந்தியா மற்றும் எகிப்திற்கு இடையே  கலைப் படைப்புகளின்  கூட்டிணைவை ஊக்குவிக்கிறது.
  • இவ்வாண்டு நடத்தப்பெற்று வரும் இத்திருவிழாவில் அலங்கார அணிவகுப்பு மற்றும் இந்தியத் திரைப்படங்களை திரையிடல் என இரு புதிய நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பொழுதுபோக்கு கேளிக்கை நிறுவனமான டீம்வோர்க் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கலாச்சாரத்திற்கான மௌலானா ஆஸாத் மையம் (Maulana Azad Centre for Indian Culture) மற்றும் எகிப்தில் உள்ள இந்தியத்  தூதரகம் இத்திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்