TNPSC Thervupettagam

நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) அவசரச்சட்டம் 2018

June 19 , 2018 2210 days 771 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) அவசரச் சட்டம் பிறப்பித்தலுக்கு ஒப்புதல் அறிவித்துள்ளார்.
  • இந்த அவசரச் சட்டம், 2016-ஆம் ஆண்டின் நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டில் (Insolvency and Bankruptcy code-IBC) சில சரிப்படுத்தும் முறைகளை ஏற்படுத்துகின்றது.
  • இந்த அவசரச் சட்டம், நிதியியல் துறைகளையும் குறிப்பாக நிலம் மற்றும் மனைகள் விவகாரத்தையும் பாதிக்கும் விதமான சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அம்மாற்றங்களாவன.
    • வீடு வாங்குபவர்கள் நிதியியல் கடன் வாங்குபவர்கள் என்று அங்கீகாரம்
    • சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு விதிமுறைகள்.
    • திவால் விண்ணப்பத்தை திரும்பப் பெறுதல்
  • இந்த திருத்தத்திற்கு பிறகு, IBC குறியீடு வீடு வாங்குபவர்களை நிதியியல் கடன் பெறுபவர்களாக அங்கீகரித்து கடன் கொடுப்பவர்கள் குழுவில் சரியான அங்கீகாரம் கிடைக்க செய்யும். எனவே வீடு வாங்குபவர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவர்.
  • தற்சமயம், சிறு, குறு, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்கள் என்று கருதப்படாமல் அது தொடர்பாக எந்த தகுதியமைப்பையும் பெறாமல் தங்கள் நிறுவனங்களை ஏலம் விட அனுமதிக்கப் படுவர்.
  • இந்த அவசரச் சட்டம் திவால் விண்ணப்பங்களை திரும்பப் பெறுதலை, கடன் கொடுப்பவர்கள் குழுவின் 90 சதவிகித பங்குதாரர்கள் அனுமதித்த பிறகே திரும்பப் பெற இயலச் செய்கிறது.
  • மேலும் கடன் கொடுப்பவர்கள் குழுவின் வாக்கு மதிப்பு நிலை, எல்லா முக்கிய முடிவுகளுக்கும் 75 சதவிகிதம் என்ற நிலையிருந்து 66 சதவிகிதம் என்ற நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்