நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) அவசரச்சட்டம் 2018
June 19 , 2018 2352 days 832 0
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) அவசரச் சட்டம் பிறப்பித்தலுக்கு ஒப்புதல் அறிவித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டம், 2016-ஆம் ஆண்டின் நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டில் (Insolvency and Bankruptcy code-IBC) சில சரிப்படுத்தும் முறைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த அவசரச் சட்டம், நிதியியல் துறைகளையும் குறிப்பாக நிலம் மற்றும் மனைகள் விவகாரத்தையும் பாதிக்கும் விதமான சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அம்மாற்றங்களாவன.
வீடு வாங்குபவர்கள் நிதியியல் கடன் வாங்குபவர்கள் என்று அங்கீகாரம்
சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு விதிமுறைகள்.
திவால் விண்ணப்பத்தை திரும்பப் பெறுதல்
இந்த திருத்தத்திற்கு பிறகு, IBC குறியீடு வீடு வாங்குபவர்களை நிதியியல் கடன் பெறுபவர்களாக அங்கீகரித்து கடன் கொடுப்பவர்கள் குழுவில் சரியான அங்கீகாரம் கிடைக்க செய்யும். எனவே வீடு வாங்குபவர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவர்.
தற்சமயம், சிறு, குறு, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்கள் என்று கருதப்படாமல் அது தொடர்பாக எந்த தகுதியமைப்பையும் பெறாமல் தங்கள் நிறுவனங்களை ஏலம் விட அனுமதிக்கப் படுவர்.
இந்த அவசரச் சட்டம் திவால் விண்ணப்பங்களை திரும்பப் பெறுதலை, கடன் கொடுப்பவர்கள் குழுவின் 90 சதவிகித பங்குதாரர்கள் அனுமதித்த பிறகே திரும்பப் பெற இயலச் செய்கிறது.
மேலும் கடன் கொடுப்பவர்கள் குழுவின் வாக்கு மதிப்பு நிலை, எல்லா முக்கிய முடிவுகளுக்கும் 75 சதவிகிதம் என்ற நிலையிருந்து 66 சதவிகிதம் என்ற நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.