TNPSC Thervupettagam

நோக்கியா வரி விவகாரம்

April 30 , 2018 2257 days 713 0
  • இந்தியாவும் பின்லாந்தும் பரஸ்பர ஒப்பந்த நடைமுறையின் கீழ் நோக்கியா மீதான வரி சர்ச்சை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளன.
  • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலைக்கு வருமானவரிக் கடிதம் அனுப்பப்பட்டு, அத்தொழிற்சாலையின் மீது சொத்து முடக்க நடவடிக்கை திணிக்கப்பட்டது.
  • நோக்கியா இந்தியா நிறுவனம் 2013ல் 2500 கோடிக்கான வரி ஏய்ப்புக் கடிதம் அனுப்பப்பட்டு அது பிற்பாடு 1600 கோடியாக குறைக்கப்பட்டது.
  • நோக்கியாவின் மீது சுமத்தப்பட்ட வரி ஏய்ப்பு விவகாரம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னையில் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள தனது தொழிற்சாலையை நோக்கியாவால் விற்க முடியும்.
  • பரஸ்பர ஒப்பந்த நடைமுறையின் கீழ், மற்ற அரசுகளோடு வழக்குகளை முடித்துக் கொள்வதென்பது வரி விவகாரம் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
  • எல்லை தாண்டிய சர்ச்சைகளின் மீது தீர்வு காண்பதற்கு இம்முறை சிறந்ததென்று பரவலாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்