TNPSC Thervupettagam

நோட்ரி டேம் தீ

April 17 , 2019 1955 days 572 0
  • புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின்போது “பாரீசின் நமது பெண்மணி” என்று பொருள்படும் பாரீசின் நோட்ரி டேம் தேவாலயத்தில் தீ பற்றிக் கொண்டது. இதனால் அது குறிப்பிடத்தக்க அளவில் சேதத்தையும் கண்டது.
  • சேதாரங்கள் ஒட்டு மொத்த கூரை மற்றும் முக்கிய கூம்புப் பகுதியின் தகர்வையும் உள்ளடக்கியதாகும்.
  • பிரெஞ்சு கோதிக் கட்டிடக் கலை முறையின் ஒரு மிகச் சிறந்த மாதிரியாக இந்த தேவாலயம் கருதப்படுகின்றது.
  • இதன் கட்டுமானம் 1160 ஆம் ஆண்டில் பிஷப் மௌரைஸ் டி சுல்லி என்பவரது தலைமையில் தொடங்கப்பட்டு 1260 ஆம் ஆண்டு வாக்கில் பெருமளவில் கட்டி முடிக்கப்பட்டது. இருந்தாலும் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இது அடிக்கடி புனரமைக்கப்பட்டது.
  • இந்தத் தேவாலயத் தளம் பிரான்சின் மன்னர் என்ற முறையில் நெப்போலியன் தி கிரேட் என்ற மன்னரின் முடிசூட்டு விழா நடந்த தளமாகும்.
  • 1831 ஆம் ஆண்டில் தேவாலயத்தின் புதுமையான கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டி விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற நாவலான “நோட்ரி டேமின் கூன்முதுகு” (The Hunchback of Notre-Dame) என்ற புதினம் எழுதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்