TNPSC Thervupettagam

நோத்தோபிரான்சியஸ் சில்வாடிகஸ் - ‘கில்லி மீன்’

March 19 , 2025 12 days 64 0
  • கென்ய நாட்டின் காடுகளில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய வகையான ‘கில்லி மீன்’ இனத்தினை அறிவியலாளர்கள் கண்டறிந்து விவரித்துள்ளனர்.
  • ஆனால் இது ஏற்கனவே மிகவும் அருகி வரும் நிலையில் உள்ளது மற்றும் விரைவில் அழிந்து போகக் கூடும்.
  • கில்லி மீன் என்பது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்ற மீன் இனமாகும்.
  • அவை முக்கியமாக அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, மத்தியக் கிழக்கு மற்றும் ஆசியாவின் நன்னீர் அல்லது உவர் நீரில் காணப்படுகின்றன.
  • சுமார் 1,270 வகையான கில்லி மீன் இனங்கள் காணப்படுகின்றன.
  • அவை பருவகாலத்திற்கு பின் வறண்டு போகும் தற்காலிக குளங்களில் வாழ்கின்றன என்பதால் அவை "வருடாந்திர கில்லிமீன்" என்றும் அழைக்கப்படுகின்றன என்பதோடு அவற்றின் முட்டைகள் அடுத்த மழைக் காலம் வரை வறண்ட சேற்றில் உயிர் வாழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்