நோபல் பரிசு தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
முதல் நோபல் பரிசு வழங்கப்பட்ட தினத்தின் நினைவைக் கொண்டாட இந்நாளானது அனுசரிக்கப்படுகிறது.
முதல் நோபல் பரிசானது ஆல்பிரட் நோபலின் மறைவிற்கு (10 டிசம்பர் 1896) 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெறுவோர்களின் பெயர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்வீடனின் அரசரிடமிருந்து அவர்கள் பரிசு வழங்கப்படுவர்.
நார்வேயின் ஓஸ்லோவில் இருந்து வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசைத் தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இருந்து வழங்கப்படுகின்றன.