TNPSC Thervupettagam

நோபல் பரிசு நிகழ்ச்சித் தொடர் – கோவா

November 5 , 2017 2575 days 883 0
  • 2018-ஆம் ஆண்டின் இந்திய நோபல் பரிசுத் தொடரை கோவாவில் நடத்த கோவா மாநில அரசானது மத்திய உயிர்த் தொழிற்நுட்பத்துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம், மற்றும் சுவீடனின் நோபல் ஊடகம் ஆகியவற்றுடன்  ஓர் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இந்த பெரும் நிகழ்வானது சுவீடனின் நோபல் அருங்காட்சியகத்திலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களால் நடத்தப்படும் ஒரு மாதக் கண்காட்சியோடு இணைந்து நடத்தப்படும்.
  • சுவீடன் நோபல் மீடியா, மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை அமைச்சகத்தோடு இணைந்து மத்திய உயிர் – தொழிற்நுட்பத் துறையால் இத்தொடர் நடத்தப்படுகிறது.
  • மக்களை தொழிற்நுட்ப கல்வி அல்லாமல், அச்சு அசலான அறிவியல் (Pure Science) பாடக் கல்வியை நோக்கி அழைத்து வருவதற்காக இத்தொடர் நடத்தப்படுகிறது.
  • இதற்கு முன் இந்நோபல் பரிசுத் தொடர் குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்