TNPSC Thervupettagam

நோபல் பரிசு - மருத்துவம் அல்லது உடலியல் பிரிவு 2023

October 6 , 2023 270 days 321 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 தொற்றிற்கு எதிராக mRNA தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கான அவர்களின் ஆராய்ச்சிக்காக இது வழங்கப்பட்டுள்ளது.
  • அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆனது, "கோவிட்-19 தொற்றிற்கு எதிரான திறன் மிக்க mRNA தடுப்பு மருந்துகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் தள மாற்றங்கள் தொடர்பானதாகும்".
  • mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்துகளானது கோவிட்-19 தொற்றிற்கு எதிராக ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டவையாகும்.
  • mRNA என்பது மரபணு தகவல்களைக் கொண்டு செல்லும் நியூக்ளிக் அமிலத்தின் ஒரு வடிவமான தூது RNAவினைக் குறிக்கிறது.
  • மற்ற தடுப்பு மருந்துகளைப் போலவே, mRNA தடுப்பு மருந்துகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, உயிருள்ள வைரஸிலிருந்து உருவாகும் தொற்றுநோயை எதிர் கொள்ள உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்க முயற்சிக்கிறது.
  • mRNA தடுப்பு மருந்துகள் வைரஸ் புரதத்துடன் தொடர்புடைய மரபணுப் பொருளின் ஒரு பகுதியை மட்டுமே அந்தப் பகுதியில் வெளியிடுகின்றன.
  • எனவே, mRNA தடுப்பு மருந்துகள் தனிநபர்களை வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்