நோய் எதிர்ப்புத் திறனூட்டல் (Immunization Day) – நவம்பர் 10
November 11 , 2017 2709 days 853 0
ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி ஆனது உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் தினமாக உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்படுகிறது.
தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கு எதிராக சரியான காலத்திய தடுப்பூசியிடலை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் அளவு, தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கப்படும் புவியியல் பகுதிகளின் பரவல் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்படும் மனித வளம் போன்றவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய உலகளாவிய பொது தடுப்பூசித் திறனூட்டல் திட்டத்தை (Universal Immunization Programs -UIP) இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்திரா தனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு எதிராக இலவசமான தடுப்பூசியிடலை (vaccination) இந்திய அரசானது அளித்து வருகிறது.
இந்திரா தனுஷ் திட்டத்தின் கீழ் தொண்டை அழற்சி (Diptheria), கக்குவான் இருமல் (Petrussis), தசை இழுப்பு வாதம் (Tetanus), தட்டம்மை (measles), குழந்தைப்பருவ காசநோயின் மோசமான நிலை (Severe form of childhood Tuberculosis), கல்லீரல் அலற்சி-பி (Hepatitis B), மூளைக்காய்ச்சல் (megningitis), செயல்படுத்தப்படாத போலியோ வைரஸ் (Inactivated Polio Virus – IPV) போன்றவற்றிற்கான தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களிலும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான (Japanese Encephalitis) தடுப்பூசி ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவியுள்ள மாவட்டங்களிலும், நிமோனியா தடுப்புத்திறனூட்டல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி, நியுமோகாக்கல் இணைவு தடுப்பூசி (Pneumococial conjugate Vaccine – PCV) போன்றவை இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால இடைவெளிப் படியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.