உலகளாவியத் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை கொரானா வைரஸ் நோய்த் தொற்றை கையாளுவதற்கு வேண்டி அரசாங்கங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக நோய்வாய்ப் பட்டவர்களைக் கண்காணித்தல் என்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளன.
உலகச் சுகாதார அமைப்பானது நோய்வாய்ப் பட்டவர்களைக் கண்காணித்தல் என்பதனை சமூகப் பரவலைத் தடுப்பதற்காக நோய்வாய்ப் பட்டவர்களைக் அடையாளம் கண்டு, ஆய்வு செய்து, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு செயல்முறை என்று வரையறை செய்து உள்ளது.