இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, அதன் பகுதியளவு கிரையோஜெனிக் எஞ்சினின்சோதனையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
2000 kN (கிலோ நியூட்டன்) திறன் கொண்ட பகுதியளவு-கிரையோஜெனிக் எந்திரத்தின் இடைநிலைக் கட்டமைப்பிற்கான முதலாவது ஒருங்கிணைந்தச் சோதனையானது மேற் கொள்ளப் பட்டது.
தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை இயக்க வளாகத்தில் புதிதாக இணைக்கப் பட்டப் பகுதியளவு க்ரையோஜெனிக் ஒருங்கிணைந்த எஞ்சின் மற்றும் நிலைச் சோதனை மையத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.