ஹார்வெஸ்ட் மூன் எனப்படும் செப்டம்பர் மாத முழு நிலவுடன் பகுதியளவு சந்திர கிரகணம் ஒன்றி நிகழ்ந்தது.
இந்தப் பௌர்ணமி நிலவு ஆனது பூமிக்கு மிக அருகில் இருந்ததால் வழக்கத்தை விட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளித்தது.
மேற்கு ஆசியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் மட்டும் இந்த கிரகணம் தென்பட்டது.
இந்தியாவில் இருந்து காணக் கூடிய வகையிலான அடுத்த ஒரு முழு சந்திர கிரகணம் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதியன்று நிகழும், அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் தேதியன்று ஒரு பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்படும்.