பாறையில் வாழும் பெரிய உடல் கொண்ட புதிய வகை பல்லி (கெக்கோ) இனத்தை ஆராய்ச்சியாளர்கள் குழு பக்கமலைப் பகுதியில் கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் இது உள்ளது.
இந்த புதியப் பல்லி இனமானது முதன்முதலில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்ட மலையின் பெயரால் ஹெமிடாக்டைலுஸ் பக்கமலையென்சிஸ் என்று இதற்குப் பெயரிடப் பட்டது.
பெரிய உடல் அளவைக் கொண்டுள்ள (101-109 மிமீ) இது கெக்கோ ஹெமிடாக்டைலஸ் இனத்தைச் சேர்ந்தது ஆகும்.