கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகம் (Pakke Tiger Reserve - PTR) வழியாக நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க அருணாச்சலப் பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பக்கே புலிகள் காப்பகம் பாகுய் புலிகள் காப்பகம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்தப் புலிகள் காப்பகம் தனது இருவாய்ச்சி கூடுகளை ஏற்றுக் கொள்ளுதல் திட்டத்திற்காக ‘அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்பு’ என்ற பிரிவில் 2016 ஆம் ஆண்டின் இந்தியா பல்லுயிர் விருதினை வென்றுள்ளது.