வங்கதேச நாட்டின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான பங்கபந்து விண்கலம் – 1 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 வகை ராக்கெட் மூலம் (Falcon 9 rocket) கென்னடி விண்வெளி ஏவுமையத்தின் ஏவு வளாகம் 39A-விலிருந்து (39A Launch Complex) ஏவப்பட உள்ளது.
இந்த விண்கலமானது, வங்கதேசம் முழுவதும் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்விண்கலம், பிரான்கோ–இத்தாலியன் விண்வெளி உற்பத்தியாளரான தாலெஸ் ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
வங்கதேசத்தின் தேசத்தந்தையான பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் பெயர் இவ்விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
இவ்விண்கலம், வங்கதேச மக்களுக்கு இணைய இணைப்பு வசதி, கைப்பேசி சேவைகள், ரேடியோ, பேக்ஹால் (வீடியோ), DTH தொலைக்காட்சி சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடர்பு தொடர்பான சேவைகள் ஆகியவற்றை வழங்கும்.