TNPSC Thervupettagam

பசால்ட் அகழ்வு – தியோச்சா பச்சாமி

February 11 , 2025 12 days 105 0
  • மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் தியோச்சா பச்சாமி நிலக்கரி சுரங்கத் திட்டத்தின் பணிகள் சமீபத்தில் தொடங்கின.
  • பசால்ட் அகழ்வுப் பணிகள் ஆனது, பசால்ட்டின் தடிமனான அடுக்கின் கீழ் நிலக்கரி இருப்பு ஆனது கண்டறியப்பட்டதால், அந்த நிலக்கரிச் சுரங்கத்தினைச் செயல்பட செய்வதற்கான முதல் முக்கிய படிநிலையாக கருதப்படுகிறது.
  • இந்தத் திட்டப் பகுதியில், பசால்ட்டின் தடிமன் ஆனது 100 மீட்டர் முதல் 350 மீட்டர் வரை உள்ளது.
  • சுமார் 35,000 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம் ஆனது மேற்கு வங்காள அரசாங்கத்தின் மிகப்பெரியத் திட்டமாகக் கருதப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு (R&R) தொகுப்பின் கீழ், அந்தப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் ஒருவருக்கு அதன் சந்தை மதிப்பில் இருமடங்கும், நிலத்தின் விலையில் சுமார் 100% இழப்பீடும் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்