தொடர்ச்சியான ஆழமற்ற நில நடுக்கங்கள் ஆனது, 1906 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சான் பிரான்சிஸ்கோ நிலநடுக்கத்தைப் போன்ற பேரழிவினை ஏற்படுத்தும் ஆற்றலுடன் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியினைத் தாக்கும் ஆற்றலைக் கொண்டு உள்ளன.
இந்தப் புதிய நிலநடுக்க அச்சுறுத்தல் ஆனது, பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கணிசமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தப் பகுதியானது, சியாட்டில், டகோமா மற்றும் ஒலிம்பியா போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கியது.
கிபி 923 மற்றும் 924 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நிலப் பிளவுகள் குறித்த தகவல்களை இணைப்பதற்கு மரங்களின் வளையக் கணக்கீட்டு அறிவியல் மற்றும் அதிநவீன கதிரியக்கக் கரிமக் காலக் கணிப்பு முறை ஆகியவை இந்த முக்கிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.
மேற்பரப்பிற்கு அடியில் 18 மைல்களுக்குக் குறைவான தொலைவில் அமைந்துள்ள இதே போன்ற ஆழமற்றப் பிளவுகள் தோராயமாக 1,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆயிரமாவது ஆண்டு கால நிலப் பிளவுகள் எனப்படும் இவை பல்வேறு நில நடுக்கங்கள் ஒரே நேரத்தில் ஏற்பட்டு 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினை ஏற்படுத்தி, மத்தியக் கிழக்கு பகுதியில் சேதங்களை ஏற்படுத்தியது.