TNPSC Thervupettagam

பசியை ஒழிப்பதற்கு யுக்தி சார்ந்த கூட்டாண்மை

November 10 , 2018 2112 days 629 0
  • உலகம் முழுவதும் 2030 ஆம் ஆண்டில் பசியை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (UN’s World Food Programme - WFP) மற்றும் சீனாவின் இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபா குழுமம் ஆகியவை இணைந்து யுக்தி சார்ந்த கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, அலிபாபா குழுமத்தின் க்ளவுட் கம்பியூட்டிங் (அ) மேகக் கணினிப் பிரிவான அலிபாபா க்ளவுடானது டிஜிட்டல் முறையிலான “உலக பசி வரைபடத்தை” உருவாக்க உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றவிருக்கிறது.
  • உலகத்தில் பசியால் வாடுபவர்கள் மற்றும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்க இந்த வரைபடம் உதவும். 2030 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் பசியை ஒழிப்பது ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும்.
  • மேலும் அவசர காலங்களில் எதிர்வினையாற்றுவதற்கான நேரத்தை குறைப்பதையும் பணியின் செயல்திறனை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்