TNPSC Thervupettagam

பசு அமைச்சரவை

November 21 , 2020 1375 days 602 0
  • மாநில அரசானது பசு அமைச்சரவையை அமைக்கும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • இது அம்மாநிலத்தில் பசு இனத்தை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் வேண்டி பணியாற்ற இருக்கின்றது.
  • அசாம், கேரளா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பசு வதையின் மீது எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வில்லை.
  • எனினும், சில மாநிலங்கள் காளைகள் மற்றும் காளை மாடுகளின் வதையை அனுமதிக்கின்றது.
  • அந்த மாநிலங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கோவா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்