March 11 , 2025
43 days
88
- நம் நாடு முழுவதும் ஒன்றிய அரசாங்கம் ஆனது, "பசு ஔஷதி" கடைகளைத் திறக்க உள்ளது.
- கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிக மலிவு விலையில் பொது கால்நடை மருந்துகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- தற்போதுள்ள பிரதான் மந்திரி பாரதிய ஜன ஔஷதி மையங்களை (PMBJK) போன்ற கருத்தாக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
- பசு ஔஷதி கடைகள் ஆனது, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி மையங்களால் (PMKSK) நடத்தப்படும்.
- 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 20வது கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் கால்நடைகள் எண்ணிக்கையானது 535.78 மில்லியனாக இருந்தது.
- இதில் மொத்தப் பசுக்களின் எண்ணிக்கையானது (கால்நடை, எருமை, மிதுன் மற்றும் யாக் உட்பட) 302.79 மில்லியன் அடங்கும்.

Post Views:
88