TNPSC Thervupettagam

பசுபிக்கில் நிலநடுக்கம்

March 25 , 2020 1579 days 606 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று 7.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கமானது வடக்கு பசிபிக்கைத் தாக்கியது.
  • இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 37 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டு, ரஷ்யாவின் குரில் தீவுகளைத் தாக்கியது.
  • இது பசிபிக் பெருங்கடலில் இருந்து ஓகோட்ச்க் என்ற கடலைப் பிரிக்கின்ற ஒரு எரிமலைத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்ததாகும்
  • இந்தத் தீவுகள் தற்பொழுது ரஷ்யாவினால் நிர்வகிக்கப் படுகின்றன.
  • இருப்பினும், இந்தத் தீவுக் கூட்டங்களின் தெற்கில் உள்ள 4 தீவுகளின் மீதான ஜப்பானின் உரிமைக் கோருதலானது தற்பொழுது நடைபெற்று வரும் குரில் தீவுகள் பிரச்சினைக்கு இட்டுச் சென்றுள்ளது.
  • இந்தத் தீவுகள் மேலோட்டு இயக்க நிலைப்புத் தன்மையற்ற பகுதியான “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது.
  • நெருப்பு வளையம் என்பது பல்வேறு எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் நிகழும் பசிபிக்கில் உள்ள ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்