மத்திய மின்சார ஆணையம் (CEA) தேசிய மின் பகிர்மானத் திட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டத்தின் (GEC-II) கீழ் தமிழ்நாட்டிற்கு 719.76 கோடி ரூபாய் செலவில் மின் பகிர்மானக் கட்டமைப்பினை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 19 ஜிகாவாட் (GW) அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஆனது மாநிலங்களுக்குள் பகிர்மான அமைப்பில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கூடுதலாக சுமார் 4,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 624 சுற்று கிலோமீட்டர்கள் (CKM) அளவிலான மின் பகிர்மான வடங்கள் மற்றும் 2,200 துணை மின்நிலையங்களை (MVA) இலக்காகக் கொண்டுள்ளது.
பசுமை ஆற்றல் வழித்தடம்-I (GEC-I) என்ற திட்டத்தின் கீழ், சுமார் 23 GW அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் என்பது உள்-மாநில வலையமைப்புகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப் பட திட்டமிடப்பட்டது.
சுமார் 18.72 ஜிகாவாட் (31 மார்ச், 2024 வரை) திறன் ஆனது வலையமைப்புடன் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டது.