TNPSC Thervupettagam

பசுமை எரிபொருள் கூட்டணி இந்தியா (GFAI)

January 19 , 2024 311 days 305 0
  • 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (GIM), இந்தியா பசுமை எரிபொருள் கூட்டணி (GFAI) என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
  • நிலையான எரிசக்தி தீர்வுகள் சார்ந்த துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் கார்பன் நடுநிலையை நோக்கிய அவற்றின் கூட்டு உலகளாவிய இலக்கை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வணிகங்கள், அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நிதிப் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சூழல் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்தியாவில் நிலையான எரிசக்தி வளர்ச்சியை மேம்படுத்துவதே GFAI கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
  • டென்மார்க் நாட்டின் ஒன்பது முன்னோடியான நிறுவனங்கள் ஆனது, ஸ்தாபன உறுப்பினர்களாக GFAI முன்னெடுப்பில் தங்களை ஈடுபடுத்தியுள்ளன.
  • GFAI கூட்டணியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் இந்திய ஹைட்ரஜன் கூட்டணி, சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உள்ள எரிசக்தி கூட்டமைப்பு, டென்மார்க் நாட்டின் எரிசக்தி நிறுவனம் மற்றும் ஸ்டேட் ஆஃப் கிரீன் அமைப்பு ஆகியவை அடங்கும்.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையை அடைவதை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப் பட்ட பசுமை உத்திசார் கூட்டாண்மையின் (GSP) கீழ் மேற்கொள்ளப் பட்ட செயல்பாடுகளை GFAI பறைசாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்