மகாராஷ்டிரா மாநிலம் , பசுமை காலநிலை நிதியம் மூலமாக 270 மில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்கு 2030 நீர் வளக் குழு (2030 Water Resources Group , 2030WRG) உதவவுள்ளது.
ஜல்யுக்த் சிவார் திட்டம் (Jalyukt Shivar Yojana) போன்ற ஒருங்கிணைந்த நீர்நிலைத் திட்டங்களில் முதலீடு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.
வேளாண் வளர்ச்சி மற்றும் வருவாய் மேம்பாடு ஆகியவற்றுடன், பாசனப் பகுதிகளில் நீர் பயன்பாட்டு திறன்களை மேம்படுத்தும் திட்டங்களை துரிதப்படுத்தவும் இந்தத் திட்டம் முனைகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி மூலம் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பசுமை காலநிலை நிதியமானது, ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின் (UN Framework Convention on Climate Change) கொள்கைகள் மற்றும் விதிகளின் படி செயல்படுவதற்கு உருவாக்கப்பட்ட நிதி ஆகும் .
2030 நீர் வளக் குழு (2030 Water Resources Group - 2030WRG) என்பது சர்வதேச நிதி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. மேலும் இது வளரும் நாடுகளில் நீர்நிலைகளை மேம்படுத்தும் அரசு – தனியார்- சிவில் சமூகத்தின் கூட்டு முயற்சி ஆகும்.
நீர் வளங்களை உபயோகிப்பதில் ஒத்துழைப்பையும், சீர்திருத்தங்களையும் 2030 ஆம் ஆண்டுக்குள் கொண்டு வருவது இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும்.