தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2022 ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்கியது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகளுக்கு மாற்றாக ஏற்றவாறான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பங்களித்த தனிநபர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி அல்லது SIET கல்லூரி என்றழைக்கப்படும் இந்தக் கல்லூரி இவ்விருதையும், அக்கல்லூரி முதல்வர் அம்துல் அஜீஸின் குழுவினர் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசையும் பெற்றனர்.
இதர விருது பெறுநர்கள்:
அரசு மேல்நிலைப் பள்ளி, பழைய பெருங்களத்தூர்;
பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு;
ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ அமைப்பு , அசோக் நகர்;
ஜி.தங்கராஜ், தேசியப் பசுமைப்படை; மற்றும்
கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பவர் சிஸ்டம்ஸ் பிரிவு, ஓசூர்.
மொத்தம் 92 உறுப்பினர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் இந்த விருதையும் வென்றுள்ளனர்.