TNPSC Thervupettagam

பசுமை சார் உரிமைகோரல்களுக்கான வழிகாட்டுதல்கள்

January 29 , 2024 305 days 279 0
  • இந்திய விளம்பர தர நிர்ணய சபை (ASCI) ஆனது, போலியான சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற தவறான உரிமை கோரல்களைத் தடுப்பதற்காக வேண்டி வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைவு வழிகாட்டுதல்கள் ஆனது, பசுமைக் கண்துடைப்பு - சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற தவறான உரிமை கோரல்களை முன்வைத்து ஏமாற்றும் நடைமுறை - செய்வதை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.
  • இது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதால் விளம்பரங்களில் குறிக்கப்படும் பசுமை உரிமை கோரல்கள் நம்பகமானவை, மெய்ப்பிக்கத் தக்கவை மற்றும் வெளிப்படையானவையாக இருக்க வேண்டும் என்பதை இது கட்டாயமாக்குகிறது.
  • "பசுமை" அல்லது "சுற்றுச்சூழலுக்கு உகந்தவை" போன்ற உரிமை கோரல்களை உருவாக்கும் விளம்பரங்கள் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.
  • விளம்பரங்கள் தனது சட்ட இணக்கத்தையே சுற்றுச்சூழல் சாதனையாக சந்தைப் படுத்த முடியாது.
  • தனது போட்டி நிறுவனத்திடம் சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் ஓர் அம்சத்தினைக் கொண்டிராத பட்சத்தில், தன்னிடம் சுற்றுச்சூழலை சேதப்படுத்திடும் அத்தகையக் கூறுகள் இல்லை என்று அந்த நிறுவனம் குறிப்பாக முன்னிலைப் படுத்த முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்