TNPSC Thervupettagam
February 1 , 2021 1268 days 847 0
  • கூடுதல் வரியை விதிக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இது சாலையில் ஓடும் பழைய வாகனங்களுக்கு விதிக்கப்படும்.
  • பசுமை வரியானது மாசு வரி அல்லது சுற்றுச்சூழல் வரி என்றும் அழைக்கப்படுகிறது.
  • மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • இது மாசுபாட்டை உருவாக்குவோரையும் வரி செலுத்த வைக்கும்.
  • இது மக்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதகமற்ற வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும்.
  • பசுமை வரி விதிமுறைகளின் கீழ், எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் நேரத்தில் பசுமை வரி விதிக்கப்படும்.
  • இது சாலை வரியில் 10 முதல் 25% வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • நகரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைந்த பசுமை வரியைச் செலுத்தும்.
  • இருப்பினும், டிராக்டர் போன்ற விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்