February 1 , 2021
1398 days
910
- கூடுதல் வரியை விதிக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- இது சாலையில் ஓடும் பழைய வாகனங்களுக்கு விதிக்கப்படும்.
- பசுமை வரியானது மாசு வரி அல்லது சுற்றுச்சூழல் வரி என்றும் அழைக்கப்படுகிறது.
- மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இது மாசுபாட்டை உருவாக்குவோரையும் வரி செலுத்த வைக்கும்.
- இது மக்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதகமற்ற வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும்.
- பசுமை வரி விதிமுறைகளின் கீழ், எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் நேரத்தில் பசுமை வரி விதிக்கப்படும்.
- இது சாலை வரியில் 10 முதல் 25% வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
- நகரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைந்த பசுமை வரியைச் செலுத்தும்.
- இருப்பினும், டிராக்டர் போன்ற விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
Post Views:
910