சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்த மாவட்ட ஆட்சியர்கள், தொழிலகங்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசானது பசுமை விருதுகளை வழங்கியது.
இந்தப் பசுமை விருதுகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது வழங்குகிறது.
இது தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்பை அளிக்கும் தொழிலகங்களை அங்கீகரிக்கிறது.
நீலகிரியின் ஆட்சியரான இன்னசன்ட் திவ்யா, மதுரையின் முன்னாள் ஆட்சியரான வீர ராகவ ராவ் மற்றும் திருநெல்வேலியின் முன்னாள் ஆட்சியரான சந்தீப் நந்தூரி ஆகியோர் 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெற்றனர்.
2018 ஆம் ஆண்டிற்கான திறமையான முறையில் மாசுத் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த தொழிலகங்களுக்கான விருது பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
அதானி கடல்சார் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்
ஜெய்விஷ்ணு ஜவுளி நிறுவனம்
ராம்கோ சிமெண்ட்ஸ்
கல்வி நிறுவனங்களுக்கான பசுமை விருதுகளானது பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் நிறுவனங்கள் – காஞ்சிபுரம்
மெப்கோ ஸ்க்லெங் பொறியியல் கல்லூரி
ராம்கோ வித்யாலயா – விருதுநகர் மாவட்டம்
பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகளைத் தடை செய்வதற்கான மாநில அரசின் உத்தரவை திறம்பட செயல்படுத்தியோர்க்கான பசுமை விருதுகள்
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையர் – P. அமுதா
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் – ஷில்பா பிரபாகர் சதீஷ்.