TNPSC Thervupettagam

பசுமை ஹரியானா கொள்கை விளக்க அறிக்கை – 2024

September 13 , 2024 18 days 50 0
  • ஹரியானாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்காக முதல் முறையாக 'பசுமை அறிக்கை 2024' எனப்படும் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
  • காற்று மாசுபாடு, கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், ஆரவல்லி மலைத் தொடரைப் பாதுகாப்பதன் அவசியம் போன்ற பல்வேறு நெருக்கடி மிக்கப் பிரச்சினைகளை இது முன் வைக்கிறது.
  • தேசியச் சராசரியான 21 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, ​​3.6% பங்குடன் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான வனப் பரவலைக் கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது.
  • மேலும், இந்த மாநிலம் உலகில் மிகவும் மாசுபட்ட 50 இடங்களில் எட்டு இடங்களைக் கொண்டுள்ளது.
  •  ‘பசுமை அறிக்கை 2024’ என்ற அறிக்கையில் உள்ள முக்கிய கோரிக்கை: பூட் பகுதிகள் மற்றும் சிவாலிக் போன்றவை உள்ளிட்ட ஆரவல்லி மலைத் தொடரை ‘முக்கியச் சுற்றுச்சூழல் மண்டலங்களாக’ சட்டப் பூர்வமாக நியமிக்க வேண்டும்.
  • கடுமையான 1994 ஆம் ஆண்டு டெல்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினை போலவே ஹரியானாவிற்கு ஒரு ‘மரப் பாதுகாப்புச் சட்டத்தை’ இயற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்