TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் இயங்கும் பேருந்து

October 1 , 2023 422 days 320 0
  • பசுமை ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பசுமை ஹைட்ரஜன் ஒரு நிலையான மாற்று எரிபொருள் ஆகும் என்பதோடு, மேலும் இது காற்றினை மாசுபடுத்தும் வாயுக்களை வெளியிடுவதில்லை.
  • ஹைட்ரஜனின் எரிப்பு செயல்முறையின் போது நீராவி மட்டுமே துணைப் பொருளாக வெளிப் படுகிறது எனவே இதிலிருந்து மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறாது.
  • 30 கிலோ கொள்ளளவு கொண்ட நான்கு எரிவாயு உருளைகள் இதில் பொருத்தப் பட்டு உள்ள  இந்தப் பேருந்துகளை 350 கி.மீ. தூரம் வரை இயக்க முடியும்.
  • இந்த நான்கு எரிவாயு உருளைகள் மீள்நிரம்ப 10 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்