TNPSC Thervupettagam

பசுமைப் பத்திரங்கள் – IRFC

January 15 , 2018 2359 days 1353 0
  • மும்பை பங்குச் சந்தையின் இந்திய சர்வதேச பங்குச்சந்தை (India International Exchange - India INX) இந்திய ரயில்வே நிதிக் கழகத்தின் (Indian Railway Finance Corporation’s - IRFC) பசுமைப் பத்திரங்களை தனது கடன் பட்டியலிடும் நடைமுறையான உலகளாவிய பங்குகளுக்கானச் சந்தையில் பட்டியலிட்டுள்ளது.
  • சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் (International Financial Services Centre - IFSC) பட்டியலிடப்பட்ட முதல் கடன் பங்குப் பத்திரம் IRFCயின் பசுமைப் பத்திரங்களாகும்.
  • இந்தியாவின் முதல் கடன் திரட்டு நடைமுறையான இந்திய சர்வதேச பங்குச் சந்தைகளுக்கான உலகளாவிய சந்தைப் பிரிவு (Global Securities Market - GSM), உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து, இந்திய மற்றும் அந்நிய பங்கு வெளியீடுவோர்களின் விருப்பப்படி, எந்த நாட்டு நாணயத்திலும் நிதிகளை திரட்ட அனுமதி அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்