சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (IMO) பசுமைப் பயணம் 2050 திட்டத்திற்கான முன்னோடியான தலைமை நாடாக இந்தியாவினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
கப்பல்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) அளவைக் குறைக்கும் முயற்சிகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பசுமைப் பயணம் 2050 திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள்: அசர்பைஜான், பெலிஸ், சீனா, குக் தீவுகள், ஈக்வடார், ஜார்ஜியா, இந்தியா, கென்யா, மலேசியா, சாலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகியனவாகும்.
இது 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நார்வே அரசாங்கத்திற்கும் சர்வதேச கடல்சார் அமைப்பிற்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும்.