TNPSC Thervupettagam

பசுமையான தீபாவளி , ஆரோக்கியமான தீபாவளி

August 19 , 2017 2525 days 978 0
  • மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் , “பசுமையான தீபாவளி , ஆரோக்கியமான தீபாவளி “ என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் பட்டாசுகளை வெடிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடுதலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு ஊக்குவிக்கின்றது.
  • கடந்த சில ஆண்டுகளாக இந்திய நகரங்களில் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான அளவீடுகளைத் தாண்டி அதிக அளவில் காற்று மாசுபடுகிறது. தீபாவளியின் போது அதிகப்படியாக பட்டாசுகளை வெடிப்பதும் ,அவை ஏற்படுத்தும் புகை மண்டலமும் மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.
  • கடந்த வருடம் டெல்லி மாநகர பகுதிகளில் , குறிப்பாக தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்றின் மாசு நிலை ஆபத்தான அளவுக்கு உயர்ந்தது . இதனால் பள்ளிகூடங்கள் , கட்டுமானத் தளங்கள் , மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை மூடும் நிலைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்