இத்தினம் நவம்பர் 7 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகின்றது.
இத்தினமானது பச்சிளங் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பச்சிளங் குழந்தைகளை சரியான முறையில் கவனித்துக் கொள்வதன் மூலம் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இந்தியா தனது குழந்தை இறப்பு விகிதத்தை (Infant Mortality Rate - IMR) கடந்த 11 ஆண்டுகளில் 42 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அதாவது 2006 ஆம் ஆண்டில் உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளுக்கு 57 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதத்தை 2017 ஆம் ஆண்டில் 33 ஆகக் குறைத்துள்ளது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் IMR விகிதம் 37 ஆகவும் நகர்ப்புறங்களில் IMR விகிதம் 23 ஆகவும் இருக்கின்றது.
IMR விகிதக் குறைப்பு இருந்த போதிலும், 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் IMR விகிதமானது உலகளாவிய விகிதமான 29.4ஐ விட அதிகமாக இருக்கின்றது. இந்தியாவின் IMR விகிதமானது மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் IMR விகிதத்திற்குச் சமமானதாகவும் பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைத் தவிர பெரும்பாலான தெற்காசிய அண்டை நாடுகளை விட அதிகமாகவும் உள்ளது.