TNPSC Thervupettagam

பச்சை இலைகளின் ஆவியாகும் சேர்மங்கள்

May 15 , 2024 193 days 230 0
  • தாவரங்கள் ஆபத்தில் உள்ள மற்ற தாவரங்களால் வெளியிடப்படும் பச்சை இலைகளின் ஆவியாகும் (GLVs) சேர்மங்களால் ஆபத்தைக் குறித்து உணர்கின்றன என்பதைச் சமீபத்தில், அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
  • தாவரங்கள் மூலக்கூறு எதிர்வினைகளின் தொடரமைப்பினை உள்ளடக்கிய இரண்டு முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டுள்ளன.
  • ஒரு தாவரம் சேதமடையும் போது அதில் எதிர்வினைகள் தூண்டப்பட்டு, GLVகள் விளை பொருட்களாக வெளியிடப்படுகின்றன.
  • பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பல்வேறு விவசாயப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கு என்று இந்த செயல்முறையைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறை  அறிவியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
  • ஆவியாகக் கூடிய சேர்மங்கள் என்பது திட அல்லது திரவ நிலையில் இருந்து ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையில் நீராவியாக மாறும் தனிமங்கள் அல்லது சேர்மங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்