சமீபத்திய அரசாணையின்படி, பிஎஸ்-VI தகுதிநிலை கொண்ட அனைத்து வாகனங்களும் அக்டோபர் 01 ஆம் தேதியிலிருந்து பச்சை நிற ஒட்டுப் படத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் பச்சை நிற ஒட்டுப் படமானது வாகனப் பதிவு விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த அரசாணையின் படி, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் உறுதியான, உயரிய பாதுகாப்புப் பதிவுத் தகடுகள் பொருத்தப்பட வேண்டும்.
வண்டிக்கான மூன்றாவது எண் பலகையானது மாசுபாடற்ற வாகனங்களிலிருந்து மாசுபடுத்தும் வாகனங்களைக் கண்டறிய உதவுவதற்காக வேண்டி வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கான பல வண்ணக் குறியீட்டைக் கொண்டு இருக்கும்.