இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் ஆடவருக்கான 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
கசகஸ்தானின் தௌலத் நிசாஸ்பெகோவ் என்பவரை 8 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதையடுத்து இவ்வெண்கலப் பதக்கத்தினை அவர் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற 6வது இந்திய மல்யுத்த வீரர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மற்ற மல்யுத்த வீரர்கள் K.D. ஜாதவ், சுசில் குமார், யோகேஷ்வர் தத், சாக்சி மாலிக் மற்றும் ரவிக்குமார் தாஹியா ஆகியோர் ஆவர்.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஒரே போட்டியில் இரண்டு இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கம் வெல்வது இதுவே இரண்டாவது முறையாகும்.