பஞ்சாப் மாநில அரசு புற்றுநோயை ஏற்படுத்தும் களைக்கொல்லியான க்ளைபோசாட்டின் விற்பனையைத் தடை செய்திருக்கின்றது.
இந்த முறைப்படுத்தப்பட்ட களைக்கொல்லியானது தொகுதி - 2A புற்றுநோயை உண்டாக்கும் பொருளாகும். மேலும் இது மனிதனின் டிஎன்ஏவையும் பாதிப்பிற்குள்ளாக்கும் ஆபத்துடையதாகும்.
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு இந்த களைக்கொல்லியின் விற்பனையை முறைப்படுத்தும் நான்காவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.