ஆளுநர் ஒரு மசோதாவை நிராகரிப்பது என்பது அந்த மசோதா காலாவதியானதாக பொருள்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு மாநிலச் சட்டமன்றத்தால் முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் ஆனது, ஆளுநர் தனது ஒப்புதலை வழங்கி கையெழுத்திட மறுப்பதால் மட்டும் காலாவதியாகிவிடாது.
அரசியலமைப்பின் 200வது சட்டப் பிரிவு ஆனது, ஆளுநரின் ஒப்புதலுக்காக ஒரு மசோதா முன்வைக்கப்படும் போது - முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அந்த மசோதாவை அனுப்பி வைத்தல் போன்ற மூன்று விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
ஒரு மசோதாவை நிராகரித்த பிறகு அதனை காலாவதியானது என்று அறிவிப்பதற்கும் அதனை மீண்டும் சட்டமாக்குவதற்காக அதை மீண்டும் சபைக்கு அனுப்புவதற்கும் நடுவில் ஒரு வாய்ப்பினை ஆளுநர் தேர்வு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியது.