பஞ்சாப் மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காக 2024 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில (விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு) சட்டம் என்ற ஒரு புதியச் சட்டத்தினை இயற்றுவதற்கான விளையாட்டுத் துறையின் திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் இத்தகையதொரு சட்டத்தினை இயற்ற உள்ள முதல் மாநிலமாக பஞ்சாப் விளங்கும்.
விளையாட்டுகளுக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதும், விளையாட்டு வீரர்களை நியாயமான முறையில் தேர்வு செய்வதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஒரு மாவட்டம் அல்லது மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் அணியை ஐந்து பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கும்.
ஒரு மாவட்ட அளவில், ஐந்து பேர் கொண்ட பாலியல் துன்புறுத்தல் விவகாரக் குழுவும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்படும்.