வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய 4,713 கோடி ரூபாய் தொகையினையும் பஞ்சாப் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இந்தத் திட்டத்தினை நன்கு செயல்படுத்துவதில் பஞ்சாப் மாநிலமானது இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
AIF ஆனது, அறுவடைக்குப் பிந்தைய ஒரு நிலைமையில் மிகத் தேவையான வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வேண்டி நடுத்தர மற்றும் நீண்ட கால நிதியுதவி வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.
பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி, 21,740 திட்டங்களுடன், அதிக எண்ணிக்கையிலான அனுமதிக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டு பஞ்சாபானது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, தகுதியான கடன்களுக்கு 3% வட்டி மானியத்தை வழங்குகிறது.
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.