TNPSC Thervupettagam

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிதிநிலை

January 31 , 2024 303 days 229 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிதி பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முதல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் தனது சொந்த வரி மற்றும் வரி சாரா வருவாய் மூலங்களைப் பெருக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளை தீவிரப் படுத்த வேண்டும்.
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் வருவாயில் சுமார் 95% ஆனது மத்திய மற்றும் மாநிலங்களிடமிருந்துப் பெறப்படும் மானிய வடிவில் உள்ளது.
  • மாநில நிதி ஆணையங்களை அமைப்பதில் ஏற்படும் தாமதங்களால் ஏற்கனவே தடை பட்டுள்ள அவற்றின் செலவினத் திறனை இது மேலும் கட்டுப்படுத்துகிறது.
  • அனைத்து மூலங்களிலிருந்தும் ஒரு பஞ்சாயத்து பெறும் சராசரி வருவாய் - வரிகள், வரி சாராதவை மற்றும் மானியங்கள் ஆகியவை முறையே 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 2.12 மில்லியனாகவும், 2021- 22 ஆம் ஆண்டில் ரூ. 2.32 மில்லியனாகவும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 2.12 மில்லியனாகவும் இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் பதிவான சரிவு ஆனது, குறைந்த மானியப் பகிர்வு காரணமாக ஏற்பட்டதாகும்.
  • பஞ்சாயத்து அமைப்புகளின் சொந்த வருவாய் ஆனது அவற்றின் மொத்த வருவாயில் 1.1% மட்டுமே ஆகும்.
  • இது நில வருவாய், தொழில் முறை மற்றும் வர்த்தக வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மீது உள்ளூர் வரிகள், கட்டணங்கள் மற்றும் சந்தாக்கள் விதிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
  • வரி சாரா வருவாய் ஆனது, முதன்மையாக பஞ்சாயத்து ராஜ் திட்டங்களிலிருந்தும், அவற்றின் மொத்த வருவாய் வரவில் 3.3% பங்கினைக் கொண்டிருக்கும் வட்டி வருவாயிலிருந்தும் பெறப்படுகிறது.
  • தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்ற மாநிலங்களை விட அதிக வரி சாரா வருவாயைப் பெற்றுள்ளன.
  • 2020-21 ஆம் ஆண்டில் 17.3 லட்சம் ரூபாயாக இருந்த ஒரு பஞ்சாயத்து அமைப்பிற்கான சராசரி செலவினம் ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 12.5 லட்சம் ரூபாயாக குறைந்து உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டு பெருந்தொற்றுக் காலத்தில் வழக்கத்தை விட அதிகமான அளவில் செலவழித்ததன் காரணமாக இந்தச் சரிவு பதிவாகியுள்ளது.
  • கோவா, கர்நாடகா, ஒடிசா, சிக்கிம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பஞ்சாயத்து அமைப்புகளில் அதிக சராசரி செலவினங்கள் பதிவாகியுள்ளன.
  • மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பஞ்சாயத்து அமைப்புகளின் வருவாய் செலவினங்களின் விகிதமானது அனைத்து மாநிலங்களுக்கும் 0.6 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
  • இது பீகாரில் 0.001 சதவீதமாகவும், ஒடிசாவில் 0.56 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்