ராஜஸ்தான் மாநில சட்டசபை, ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா, 2018 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இம்மசோதா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர் இரு குழந்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை இரு குழந்தைகளில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருக்கும் பட்சத்தின் காரணம் கொண்டு தளர்த்துகின்றது.
மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வண்ணம் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மசோதா ஏற்கனவே உள்ள சட்டத்தின் கீழ் உள்ள “ஒரு நபர் தொழுநோயால் பாதிக்கப்பட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தகுதி மறுக்கப்படுவார்” என்ற விதியை நீக்குகின்றது.
ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி, ஒருவர் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவார். இவ்விதி மாற்றுத் திறனாளி குழந்தைக்கென்று எவ்வித விதிவிலக்கையும் கொண்டிருக்கவில்லை.