மக்களவை சபாநாயகர் "Panchayat Se Parliament 2.0" என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு அரசியலமைப்பு மற்றும் பல்வேறு பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவை இது வழங்குகிறது.
இந்தத் திட்டம் ஆனது 22 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 502 பெண் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகப் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு முக்கிய அதிகாரம் அளித்து, அரசியலமைப்பு விதிகள், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் நிர்வாகம் குறித்த அவர்களின் அறிவை மேம்படுத்தி, பயனுள்ள தலைமையை உருவாக்க உதவுகிறது.