TNPSC Thervupettagam

பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் - மகாராஷ்டிரா

October 12 , 2024 71 days 128 0
  • பஞ்சாரா சமூகத்தின் மிகவும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிராவில் உள்ள வாஷிமில் போஹராதேவியில் பஞ்சாரா விராசத் என்ற ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாரா சமூகம் என்பது இராஜஸ்தானைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினரின் குழு ஆகும் என்பதோடு அக்குழுவினர் தற்போது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.
  • போஹராதேவி என்ற பகுதியானது இச் சமூகத்தினரால் மிகப் புனிதமான இடமாகக் கருதப் படுவதோடு அவர்கள் அந்தப் பகுதியினை "பஞ்சாரா சமூகத்தின் காசி" என்று குறிப்பிடுகிறார்கள்.
  • பஞ்சாரா சமூகத்தினர் வரலாற்று ரீதியாக இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள், வணிகர்கள், கால்நடை இனப்பெருக்குனர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வோர் என்ற ரீதியில் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்