இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியாவின் சூரிய ஒளி இயற்பியல் வல்லுநரான தீபாங்கர் பானர்ஜி என்பவர் நாசாவினால் செயல்படுத்தப்படும் பஞ்ச் திட்டத்தின் இணை ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்ச் என்பது “சூரியனின் கொரோனா (ஒளிவட்டம்) மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள வான்வெளி மண்டலம் (ஹீலியோஸ்பியர்) ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கான ஒளி முனைவு திருப்புமானி” ஆகும்.
இது சூரியனின் வெளிப்புற ஒளிவட்டத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளைப் படம் பிடிக்கும்.
இது அதிக அளவிலான கொரோனா வெளியேற்றங்கள் மற்றும் சூரிய ஒளிக் காற்று ஆகியவற்றைக் கண்காணித்து அவற்றைப் படமெடுக்கும்.
அதிக அளவிலான கொரோனா வெளியேற்றமானது பூமிக்கு அருகில் வானிலை நிகழ்வுகளைப் பாதித்து அவற்றை இயக்கும் திறன் கொண்டது.