வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்குவா மாகாண அரசானது பெஷாவரில் உள்ள பண்டைய இந்து சமய தளமான பஞ்ச் தளத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
பக்துன்க்குவா மாகாண (KP - Khyber Pakhtunkhwa) தொல்லியல் இயக்குநரகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை KP 2016 தொல்பொருளியியல் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்த கோயிலில் உள்ள 5 குளங்களின் மூலமாக பஞ்ச் தீர்த் எனும் இந்த பெயரை அத்தளம் பெற்றது.